வார்த்தை உச்சரிப்பு இந்திய மாணவி சுகன்யா ராய் வெற்றி
வார்த்தை உச்சரிப்பு இந்திய மாணவி சுகன்யா ராய் வெற்றி
UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM
ADDED : ஜூன் 04, 2011 02:51 PM
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பெல்லிங் பீ இணைய தளம் 8 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு வார்த்தை உச்சரிப்பு குறித்த போட்டியை நடத்துகிறது.
போட்டியின் முடிவில் ஸ்பெல்லிங் பீ கிரவுன் என்ற பட்டத்தை வழங்குகிறது. இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் பென்சில் வேனியா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாவது கிரேடு படித்து வரும் 14 வயதாகும் சுகன்யா ராய் என்பவர் ஸ்பெல்லிங் பீ கிரவுன் போட்டியில் பங்கு பெறுவது மூன்றாவது முறையாகும்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட சுகன்யாரய் 12-வது இடத்திலும் 2010-ம் ஆண்டு 20-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இவரைப் போலவே கடந்தாண்டுகளில் ஸ்ரீராம்ஹத்வார், அரவிந்த் மகான்காளி, பிரகாஷ் மிஸ்ரா, மஸ்ஹாத் அரோரா, திவ்யா செந்தில் முருகன் ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்குபெற்றுள்ளனர் .
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனாமிகா வீரமணி என்பவர் ஹாட்ரிக் சாதனை படைத்து ராணி பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
