UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM
ADDED : ஜூன் 04, 2011 10:38 AM
சென்னை வி.ஐ.டி., பல்கலை 2011ம் ஆண்டு பி.டெக்., பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நுழைவுத் தேர்வு ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. மே மாதம் 5ம் தேதி, தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
இதில் தகுதி பெற்றோருக்கு ரேங்க் அடிப்படையில், வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில், பி.டெக்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 1ம் தேதி துவங்கியது.
வி.ஐ.டி., துணைத் தலைவர் சங்கர், ஜி.வி.சம்பத் ஆகியோர், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர சிங் என்ற மாணவருக்கு முதல் அனுமதி படிவத்தை அளித்து, கவுன்சிலிங்கை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், வி.ஐ.டி., துணைத் தலைவர் நாராயணன் மற்றும் சேர்க்கை அதிகாரி ஜேம்ஸ் ஜெபசீலன் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கவுன்சிலிங் வரும் 6ம் தேதி வரை ரேங்க் அடிப்படையில் நடக்க உள்ளது.
