துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை: முதல்வர் அழைப்பு
துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை: முதல்வர் அழைப்பு
UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM
ADDED : ஜூன் 04, 2011 10:39 AM
திருச்சி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி துவாக்குடி மலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பின்வரும் பாடப்பிரிவுக்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு, சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பத்தின் விலை 25 ரூபாய். பதிவுக்கட்டணம் இரண்டு ரூபாய். சிறப்பு கணினி பயிற்சியுடன் பாடங்களுக்கான கட்டண விபரம்:
பி.லிட்., (தமிழ்) 1,650 ரூபாய், பி.ஏ., (ஆங்கிலம்) 1,650 ரூபாய், பி.ஏ., (வரலாறு) 1,650 ரூபாய், பி.எஸ்.சி., (கணிதம்) 1,770 ரூபாய், பி.எஸ்.சி., (வேதியியல்) 1,770 ரூபாய், பி.சி.ஏ., (கணினி செயல்பாட்டியல்) 1,070 ரூபாய், பி.காம்., (வணிகவியல்) 1,750 ரூபாய், பி.பி.ஏ., (வணிக நிர்வாகவியல்) 1,750 ரூபாய்.
பி.ஏ., வரலாறு (தமிழ்/ஆங்கிலம்), பி.ஏ., ஆங்கிலம், பி.லிட்., பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., வேதியியல், பி.சி.ஏ., சுழற்சி-1 மற்றும் சுழற்சி-2 பாட வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதியும், பி.பி.ஏ., பாட வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 3,415 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 1,245 ரூபாயும், தமிழக அரசின் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
