UPDATED : ஜூன் 06, 2011 12:00 AM
ADDED : ஜூன் 06, 2011 12:34 PM
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, தேர்வு நேரம் மாற்றி வைக்கப்பட்டு, அன்றைய தினம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வும் நடத்தப்பட்டது. மறு தேர்வு யாருக்கு வைப்பது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரி பல மனுக்கள் தாக்கல் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வின் முடிவுகள் இறுதியான ஞாயிறன்று வெளியாகியுள்ளது. ஐ.ஐ.டி. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இந்த தேர்வு முடிவு வெளியானதால், ஐ.ஐ.டி.யில் ரேங்க் லிஸ்டில் இடம்பெற்று தேர்வான மாணவர்கள், தங்களது ஏ.ஐ.இ.இ.இ. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஐ.ஐ.டி. தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஐ.ஐ.டி.யில்தான் சேர்வது என முடிவெடுத்துவிட்டனர். இந்த நிலையில், ஐ.ஐ.டி.யில் குறைந்த ரேங்கில் தேர்ச்சியானவர்கள், ஏ.ஐ.இ.இ.இ.தேர்வில் முதன்மையான ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
