தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ்2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

பிளஸ்2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

பிளஸ்2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு


UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM

ADDED : ஜூன் 07, 2011 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM ADDED : ஜூன் 07, 2011 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் 2010-2011-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.


முதலமைச்சர் ஜெயலலிதா மாணவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நல்ல சேவை புரியும் குடிமக்களாக உயர பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.


முதலமைச்சர் ஜெயலலிதா, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடத்தை பிடித்த ஒரு மாணவருக்கு ரூ.50,000, 2-ம் இடம் பிடித்த ஒரு மாணவருக்கு ரூ.30,000, 3-ம் இடம் பிடித்த நான்கு மாணவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம், 80 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் 6 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.


10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடத்தை பிடித்த ஐந்து மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம், 2 லட்சம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்த 24 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 39 மாணவர்களுக்கு, 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.


அதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் இடத்தை பிடித்த மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம், 75 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம், 2 லட்சம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்த 20 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம், 3 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 33 மாணவர்களுக்கு 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.


முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த கல்வியாண்டில் (2010-2011) நடைபெற்ற அரசுப் பொது தேர்வுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மொத்தம் 78 மாணவர்களுக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மாணவர்கள் மேலும் கல்வியில் சிறந்து விளங்கி, அதன் வழி நின்று அறிவுடன் கூடிய நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகிய பண்புகளுடன் வாழ்வில் மேலும் உயர வாழ்த்தினார்.


மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து சாதனை படைக்க வைத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.


முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து ரொக்க பரிசையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ரொக்க பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்துப் பாராட்டி ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us