10ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு: ஆன்-லைன்ல் ஏற்பாடு
10ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு: ஆன்-லைன்ல் ஏற்பாடு
UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM
ADDED : ஜூன் 13, 2011 10:09 AM
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான "ஆன்-லைன்&' முறையில் வேலைவாய்ப்பக பதிவு, ஜூன் 20 நடக்கிறது. இதற்கான ஆயத்தப்பணிகள் இன்று துவங்குகின்றன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகளில் "ஆன்-லைன்" மூலம் வேலைவாய்ப்பக பதிவு மேற்கொள்ள, அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பள்ளி வாரியாக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 27ல் வெளியானது. இவற்றிற்கான மதிப்பெண் சான்றிதழ்கள், ஜூன் 20ல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும் மதிப்பெண்ணை கொண்டு, "ஆன்-லைன்" பதிவு நடக்க உள்ளது.
இதில் மாணவர்களின் ரேஷன் கார்டு எண், தந்தை, தாய் பெயர், முகவரி, மொபைல் போன், தொடர்பு எண்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்படும். ஜூன் 19 வரை, பள்ளிகளில் மாணவர்கள், சான்றுகளை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் நாளில் (ஜூன் 20) வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்படும்.
