தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிமாநில மாணவர்களுக்கான ஒதுக்கீடுகள் எப்படி?

வெளிமாநில மாணவர்களுக்கான ஒதுக்கீடுகள் எப்படி?

வெளிமாநில மாணவர்களுக்கான ஒதுக்கீடுகள் எப்படி?


UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில் சேர்ந்து பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளை மேற்கொள்ள படிக்க, மொத்தம் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


* பி.ஆர்க். படிப்பில் வெளிமாநில மாணவர்களுக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த அனைத்து படிப்புகளுக்கும் ஒரே ஒரு விண்ணப்பம் அனுப்பினால் போதும். பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 4 வருடங்களும்(8 செமஸ்டர்கள்), பி.ஆர்க். படிப்புகளுக்கு 5 வருடங்களும்(10 செமஸ்டர்கள்) ஆகும்.


* இந்தியாவிலுள்ள இதர மாநிலங்கள், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.


* வடக்கு மண்டலம் - ஹரியானா, ஹிமாச்சல பிரதேஷ், ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரகான்ட், உத்திரபிரதேஷ் மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அடங்கியுள்ளன.


* இந்த மாநிலங்களுக்கு மொத்தமாக சேர்த்து 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 9 இடங்களும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


* கிழக்கு மண்டலம் - அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேஷ், பீகார், சத்தீஷ்கர், அந்தமான், ஜார்கண்ட், லட்சத் தீவுகள், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒரிசா, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


* இந்த மாநிலங்களுக்கு மொத்தமாக சேர்த்து 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 9 இடங்களும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


* மேற்கு மண்டலம் - தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டியூ, கோவா, குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


* இந்த மாநிலங்களுக்கு மொத்தமாக சேர்த்து 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 9 இடங்களும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


* தெற்கு மண்டலம் - ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


* இந்த மாநிலங்களுக்கு மொத்தமாக சேர்த்து 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 12 இடங்களும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


* காஷ்மீர் மாநிலத்திலிருந்து இதர மாநிலங்களில் குடியேறியவர்களுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அந்த ஒதுக்கீட்டிற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால், அது பிற ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும்.


தகுதிகள்:


விண்ணப்பிக்கும் மாணவர் இந்திய குடிமகனாகவும், தமிழகத்தை சாராதவராகவும் இருக்க வேண்டும். நிரந்தர இருப்பிட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


பி.இ. மற்றும் பி.டெக். சேர்வதற்கான கல்வி தகுதி:


பள்ளி மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது பிரிவு மாணவர்களுக்கு, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை சேர்த்து குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 50 சதவீதமும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 35 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த தரவரிசை(Rank), மண்டலவாரியான தரவரிசை மற்றும் ஜாதிவாரியான தரவரிசை பட்டியல்கள், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். தனியான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படாது. கவுன்சிலிங் கால் லெட்டர் மூலமாக, மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும்.


பி.ஆர்க் படிப்பில் சேர்வதற்கான தகுதிகள்:


கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு, பள்ளி மேல்நிலைக் கல்வி அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள், 50 சதவீத மதிப்பெண்ணுக்கு குறையாமலும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணுக்கு குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.


இதைத்தவிர மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் தகுதி பெற்றவர்கள். இந்த படிப்பிலும், மேலே கூறியுள்ள மதிப்பெண்களை பொதுப்பிரிவு மற்றும் எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்கள் பெற்றிருந்தால்தான் தகுதிபெற முடியும்.


சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற IB டிப்ளமோ பட்டம் பெற்றவர்களும் தகுதியுடையவர்கள். அதேசமயம், கணிதம் ஒரு பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட மதிப்பெண் விதிமுறைகள்தான் இதற்கும் பொருந்தும்.


இந்திய கட்டிடக்கலை கவுன்சில் நடத்தும், தேசிய திறனாய்வு தேர்வில்(NATA) தேறியிருக்க வேண்டும்.(80/200 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறலாம்)


முழுவிவரம் அறிந்துகொள்க:


விண்ணப்ப படிவத்தை பதிவு செய்தல், டி.டி. எடுத்தல், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் www.annauniv.edu என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.



 



 





 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us