மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்
மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்
UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM
ADDED : ஜூன் 17, 2011 10:19 AM
மருத்துவப் படிப்புகளில் சேர, 20 ஆயிரத்து, 765 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 24ம் தேதி, கட்-ஆப் மார்க் படி, தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், அனைத்து மாணவர்களுக்கும், ரேண்டம் எண்களை ஒதுக்கீடு செய்து, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கவுன்சிலிங்கின் போது, மாணவர்கள் ஒரே விதமான, கட்-ஆப் மார்க், பாட வாரியான மதிப்பெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டிருந்தால், அவர்களுக்கான சீனியாரிட்டியை கணக்கிட, ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது.
விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர் மூலம், 10 இலக்கம் கொண்ட எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து நிலைகளிலும், சரி சமமான தகுதியை இரு மாணவர்கள் கொண்டிருந்தால், அவர்களில் குறைந்த மதிப்பு கொண்ட, ரேண்டம் எண் கொண்ட மாணவர், கவுன்சிலிங்கில் முதலில் அழைக்கப்படுவார்.
பொதுவாக, ரேண்டம் எண் பயன்படுத்தும் நிலை ஏற்படுவதில்லை. மிகவும் அரிதாக, எப்போதாவது இரு மாணவர்களுக்கிடையே ஏற்படுவது உண்டு. விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது, ரேண்டம் எண்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
