UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM
ADDED : ஜூன் 17, 2011 01:06 PM
பாடப்புத்தகத்தில் உள்ள செம்மொழி மாநாடு சின்னம் அழிக்கப்பட்டதை, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சமச்சீர் கல்வி ரத்து அறிவிப்பால், தனியார் பள்ளிகள் வழக்கம்போல், புதிய புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டன. ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களை மட்டும் மாணவர்களுக்கு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2010ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சின்னம் படம் அட்டையாக அச்சிடப்பட்டு வெளியானது. இந்த படத்தை பச்சை கலர் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க அரசு உத்திரவிட்டது. அதனை கூர் நோக்கோடு ஆய்வு மேற்கொள்ள, பள்ளி கல்வி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அன்பழகன், ஈரோடு மாவட்டத்துக்கு வந்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
