தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு...

பொறியியல் கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு...

பொறியியல் கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு...


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 02:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 02:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு செல்லும் மாணவர்களுக்கான சில முக்கிய யோசனைகள் இங்கே:


கவுன்சிலிங் நாளன்று மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 2 மணி நேரம் முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சென்றுவிட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பிரத்யேக அரங்கில் உடனுக்குடன் பொறியியல் காலியிட நிலவரம் வெளியிடப்படுவது தவிர, தினமும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை காலியிட நிலவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் (www.annauniv.edu) வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாள் கவுன்சிலிங்கின் முடிவிலும் காலியிட நிலவரத்தை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.


* கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின்போது, எவ்வளவு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எந்தெந்த கல்லூரிகளில், எந்த பாடப்பிரிவில் இடம் கிடைத்தது என்ற விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உத்தேசமாக எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கலாம் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.


* கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில் வங்கி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 1,000 ரூபாயும், இதர மாணவர்கள் 5,000 ரூபாயும் கட்ட வேண்டும். இப்பணத்தை வங்கி கவுன்டரில் கட்டி, கவுன்சிலிங் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். டிமாண்ட் டிராப்ட் (டி.டி.,) ஆகவும் எடுத்து கொண்டுவரலாம். டி.டி.,யையும் வங்கி கவுன்டரில் கொடுத்து, கவுன்சிலிங் படிவத்தை பெற வேண்டும்.


* குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு வரவேண்டிய மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். மாணவருடன் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவர். முதலில் கவுன்சிலிங் விளக்க அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் இரு பெரிய திரைகளில் விளக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்கிவைத்து எடுத்து வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி, மாணவர்கள் சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


* இதற்கடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மாணவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை கண்டறிய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பது சரிபார்க்கப்படும்.


* அடுத்தகட்டமாக, கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும். கவுன்சிலிங் அறையில் 40க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். வரிசை அடிப்படையில் மாணவர்கள், அவருடன் வரும் ஒரு நபர் கம்ப்யூட்டர் முன் அமர வைக்கப்படுவர். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளரும் இருப்பர். அந்த உதவியாளர் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவர்.


அவரது உதவியுடன் காலியாக உள்ள இடங்களில், மாணவர்கள் தாங்கள் எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களாக, தாங்கள் சேர வேண்டிய கல்லூரி, பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


* கவுன்சிலிங்கில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள், கவுன்சிலிங் நடைபெறும் கட்டட மேல் தளத்தில் உள்ள அறைக்கு சென்று, தங்களுக்கான இடஒதுக்கீட்டு கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம். இக்கடித்ததை பெறும் போது, மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பொறியியல் கல்லூரி மற்றும் தேர்வு செய்த பாடப்பிரிவு தான் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த கடிதம் பெற்ற பிறகு அக்கல்லூரியையோ, பாடப்பிரிவையோ மாற்ற முடியாது.


* எதிர்பாராத காரணங்களால் கவுன்சிலிங்கில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பங்கேற்க முடியாத மாணவர்கள், பின்னர் பங்கேற்கலாம். ஆனால், பழைய ரேங்க்படி கல்லூரியையும், பாடப்பிரிவையும் அவர்களால் பெற முடியாது. மாணவர்கள் செல்லும் நேரத்தில் உள்ள காலியிடங்களில் இருந்தே தேர்வு செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us