தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.ஐ.,யில் துப்பறிவாளர் பணி வாய்ப்பு

சி.பி.ஐ.,யில் துப்பறிவாளர் பணி வாய்ப்பு

சி.பி.ஐ.,யில் துப்பறிவாளர் பணி வாய்ப்பு


UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM

ADDED : ஜூன் 20, 2011 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM ADDED : ஜூன் 20, 2011 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் சிறப்பு போலீஸ் படையின் ஒரு அங்கமான மத்திய புலனாய்வுப் பிரிவு ( சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன்  சி.பி.ஐ.,) 1941ல் நிறுவப்பட்டது. தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் 2ஜி அலைக்கற்றை மோசடி உள்ளிட்ட முக்கியக் குற்றங்களைத் துப்பறிவதில் புகழ் பெற்ற சி.பி.ஐ.,யில் 750 அசிஸ்டென்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது
22.06.2011 அன்று 27 வயதுக்கு உட்பட்டவர்கள் சி.பி.ஐ.,யின் மத்திய துணை புலனாய்வு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டரில் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்ச்சி முறை
சி.பி.ஐ.,யின் மேற்கண்ட பதவிக்கு ஜெனரல் அவேர்னஸ், ஜெனரல் நாலெட்ஜ், இங்கிலீஷ் லாங்வேஜ், ரீசனிங், மேதமெடிகல் ஆப்டிட்யூடு ஆகிய பகுதிகளை அடக்கிய அப்ஜெக்டிவ் தேர்வும், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ் வகையிலான டெஸ்கிரிப்டிவ் தேர்வும் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இதிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தப் பணியில் அமர முடியும்.


விண்ணப்பிப்பது எப்படி
சி.பி.ஐ.,யின் மத்திய துணை புலனாய்வு அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்க முடியாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு முழுமையாகவும், சரியாகவும் பதில் தர வேண்டும். இல்லையென்றால் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதே போல் இந்த தேர்ச்சி தொடர்புடைய முக்கிய தகவல்கள் அனைத்தும் இமெயில் மூலமாக மட்டுமே தரப்படும் என்பதால் உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதனையும் கட்டாயம் உறுதி செய்யவும்.


ஆன்லைனில் பதிவு செய்தபின் உங்களுக்குத் தரப்படும் யுனிக் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை பத்திரப்படுத்தவும். இப்போது கிடைக்கும் பிரின்ட் அவுட்டை போதுமான காப்பிகள் எடுத்து பத்திரப்படுத்தவும். இதனை எழுத்துத் தேர்விற்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும்.


ஆன்லைனில் பதிவு செய்யும் முன் நீங்கள் வைத்திருக்க வேண்டியவை:
உங்களுக்கான பிரத்யேக இமெயில் முகவரி, தகுதித் தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம்.
ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 22.06.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 10.07.2011
இணையதள முகவரி:
http://eapplicationmha.in/apply.asp

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us