அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கக் கூட்டுறவு
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கக் கூட்டுறவு
UPDATED : ஆக 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஏ.எம்.யூ. எனப்படும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமானது அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகத்தோடும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தோடும் இணைந்து புதிய படிப்புகளை தமது மாணவர்களுக்குத் தரஇருக்கிறது.
இதனால் ஏ.எம்.யூ. மாணவர்களுக்கு சிறப்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரிமாற்ற ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்கா சென்றுள்ள இந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பி.கே.அப்துல் அஜீஸ் கையெழுத்திட்டுள்ளார். சமீபகாலமாக, இந்த பல்கலைக்கழகத்தின் கல்வித் தரமானது தொடர்ந்து முன்னேறி வருவதுடன் ஆய்வு, நூலக வசதி, உள்கட்டமைப்பு வசதிகளிலும் சிறப்பான மேம்பாட்டை ஏ.எம்.யூ. பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

