தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலையில் அனிமேஷன் படிப்பு அறிமுகம்

அண்ணாமலை பல்கலையில் அனிமேஷன் படிப்பு அறிமுகம்

அண்ணாமலை பல்கலையில் அனிமேஷன் படிப்பு அறிமுகம்


UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM

ADDED : ஜூன் 29, 2011 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM ADDED : ஜூன் 29, 2011 04:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிலையன்ஸ் அனிமேஷன் நிறுவனத்தின் அங்கமான பிக் எய்ம்ஸ், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் அனிமேஷன் மற்றும் விஷ¤வல் எபெக்ட்ஸ் இளங்கலை பட்டப்படிப்பை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் புரோகிராம் இன் அனிமேஷன் அன்ட் விஷ¤வல் எபக்ட்ஸ் பில்ம் மேக்கிங் என்ற படிப்பினை மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் வழங்க உள்ளது.


அனிமேஷன் துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் இந்த படிப்பின் மூலம் வழங்க உள்ளது. அண்ணாமலை பல்கலையில் சேரும் மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள பி.ஐ.ஜி. ஏ.ஐ.எம்.எஸ். மையங்கள் மூலமாக அனிமேஷன் துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


சிறிய இணையதளம் முதல், சினிமா உருவாக்கம் வரை அனிமேஷனின் அனைத்து விஷயங்களையும் கற்றறியும் வகையிலும், அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் கையாளும் வகையிலும் இந்த பாடப்பிரிவு அமைந்திருக்கும்.


இன்றைய திரைப்படத் துறையின் தேவைகளுக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அளவிற்கு இந்த பாடப்பிரிவின் மூலம் மாணவர்கள் மேம்படுத்தப்படுவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us