புதிய பொறியியல் கல்லூரிகள்: விரைவில் அறிவிப்பு வெளியீடு
புதிய பொறியியல் கல்லூரிகள்: விரைவில் அறிவிப்பு வெளியீடு
UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM
ADDED : ஜூலை 02, 2011 10:15 AM
பொறியியல் கவுன்சிலிங் தொடர்ச்சியாக நேற்று, உடல் ஊனமுற்றோர் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் 10 இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு, துணைவேந்தர் மன்னர் ஜவகர், சேர்க்கைக்கான உத்தரவுகளை வழங்கினார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறும்போது, "கவுன்சிலிங் பட்டியலில் புதிய பொறியியல் கல்லூரிகள் இடம்பெறுவது குறித்து, ஐந்து நாட்களில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
கவுன்சிலிங் பட்டியலில், ஆறு புதிய பொறியியல் கல்லூரிகள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெற்ற மேலும் ஐந்து கல்லூரிகள், விரைவில் கவுன்சிலிங் வளையத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், 6ம் தேதி வரை நடக்கிறது. இதில், அவ்வப்போது உள்ள காலியிட விவரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் கவுன்சிலிங் செல்வதற்கு முன், தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகளில் காலியிடங்கள் இருக்கிறதா என்பதை, இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: www.annauniv.edu/tnea2011
