தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுயநிதி கல்லூரி : அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு

சுயநிதி கல்லூரி : அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு

சுயநிதி கல்லூரி : அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு


UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM

ADDED : ஜூலை 02, 2011 12:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM ADDED : ஜூலை 02, 2011 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள 9 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் சேர்த்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.


சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பிரிவினர் இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் நிரம்பிவிட்டன.


ரேங்க் பட்டியலில் 200 முதல் 199.25 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற 350 மாணவர்களுக்கு முதல் நாளில் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், 199.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மீதம் உள்ள முற்பட்ட பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.


அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்கள், பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்ய விரும்பாமல், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் எம்.பி.பி.எஸ். சேர விரும்பினால் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் ஷீலா கிரேஸ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us