UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM
ADDED : ஜூலை 02, 2011 05:15 PM
அ நிறம் | அளவு
டர்னர், பிட்டர், கணினி போன்ற பயிற்சிகளை அளிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த கம்யூனிட்டி கல்லூரிகளில் வாரந்தோறும் கட்டாயமாக வரவேண்டிய பாட வகுப்புகள் நடத்தப்படும் என்று ரெட் கிராஸ் சொசைட்டியின் சென்னைக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பலருக்கும் இந்த கம்யூனிட்டி கல்லூரிகள் நிச்சயம் பயன்படும் என்றும் அவர் கூறினார்.
இது மட்டுமல்லாமல், கலை மற்றும் அறிவியல் பாடங்களில் டிப்ளமோ படிப்புகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தினால் இந்த வகுப்புகள் விரைவில் துவக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
