UPDATED : ஜூலை 03, 2011 12:00 AM
ADDED : ஜூலை 03, 2011 01:08 PM
அ நிறம் | அளவு
இவர்கள் அனைவரும், முந்தைய, &'ரேங்க்&'கை விட முன்னேறியுள்ளதாக, பொறியியல் சேர்க்கை செயலர், ரேய்மாண்ட் உதிரியராஜ் தெரிவித்தார்.
பிளஸ்
2 தேர்வு முடிவுகள் வெளியான பின், முக்கிய பாடங்களில் விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல்களை வாங்கிய மாணவர்களில், 2,000 பேர் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், 50 பேருக்கு மட்டும் மதிப்பெண்கள் மாறியதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களில், 1,800 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியிருப்பது தெரிய வந்துள்ளது.மருத்துவ
படிப்புகளுக்கான, &'ரேங்க்&' பட்டியலில் 650 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளன என்று தெரிவித்து, அதுகுறித்த விவரங்களையும், இணையதளத்தில் மருத்துவக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில், 1,250 பேருக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளதாகவும், இதனால் அவர்கள், முந்தைய, &'ரேங்க்&'கை விட மேலும் முன்னேறியிருப்பதாகவும், பொறியியல் சேர்க்கை செயலர் ரேய்மாண்ட் உதிரியராஜ் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், &'கட்-ஆப்&' மதிப்பெண்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.