UPDATED : ஜூலை 03, 2011 12:00 AM
ADDED : ஜூலை 03, 2011 01:16 PM
அ நிறம் | அளவு
சென்னை
இண்டியன்
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,)யின் சார்பு நிறுவனமான, "சிக்ஷா எஜுடெக்,&' பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து, "கல்வியில் உலக அளவிலான வளர்ச்சி விகிதம்&' என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கை நடத்தியது.கருத்தரங்கை
துவக்கி வைத்து, வருமான வரித்துறை ஆணையர் விஜயகுமார் பேசியதாவது: "ஐ.ஐ.டி.,&' தேர்வுகள் மிகவும் கடினமானது. உலக அளவில் 65 பேரில் ஒருவர் தான் இதில் வெற்றி பெறுகின்றனர். இந்தியாவில், நடப்பு ஆண்டில் 4.85 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவு. ஆனால், ஆந்திராவில் மிக அதிக அளவில் தேர்ச்சி உள்ளது. அங்கு, சிறப்பு பயிற்சிக்காக பல நிறுவனங்கள் உள்ளன.தமிழகத்தில்
பயிற்சி நிறுவனங்கள் அவ்வளவாக இல்லை. இந்த குறையைப் போக்கவே, "சிக்ஷா எஜுடெக்&' நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் மட்டுமின்றி அறிவுத்திறனையும் சோதித்து, "யங் விசார்ட் கன்டஸ்ட், சிக்ஷா டேலன்ட் ரிவார்டு புரோகிராம்&' என்ற இரு சிறப்பு சலுகைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.