தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவு பெற்றது

முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவு பெற்றது

முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவு பெற்றது


UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM

ADDED : ஜூலை 07, 2011 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM ADDED : ஜூலை 07, 2011 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஜுன் 30ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.


6வது நாளான நேற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 305 இடங்களுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.


அதன்படி, நேற்றைய கலந்தாய்வில் 305 அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கை இடங்களும், 16 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும் நிரப்பப்பட்டன. தற்போது சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 599 இடங்கள் மீதமுள்ளன.


நீதிமன்ற உத்தரவின்படி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கு ஒரு இடம் மட்டும் காலியாக விடப்பட்டுள்ளது.


இதேப்போல, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் இருந்த 85 இடங்களில் 13 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். தற்போது 72 பிடிஎஸ் காலியிடங்கள் உள்ளன.


மருத்துவ சேர்க்கை பெற்ற 1,653 மாணவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்படடுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் 22ம் தேதி, கல்விச் சான்றிதழ்களுடன் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us