UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM
ADDED : ஜூலை 07, 2011 01:05 PM
மும்பை பல்கலைக்கழகம், மற்றும் அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்லூரிகளில், அடுத்த கல்வி ஆண்டு (2012-2013) முதல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முறைக்கு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் 6 லட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் புதிதாக சேர்கின்றனர். 200க்கும் மேற்பட்ட படிப்புகள் கல்லூரிகளில் உள்ளன. வழக்கமாக கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த கல்லூரிக்கே நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று அதில் தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதனால் நேரம், அலைச்சல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் விதமாக இனிமேல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மாணவர்கள் இணையதளம் தொடர்பான அறிவை பெற்றுள்ளதால், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு அவர்களுக்கு கடினமானதாக இருக்காது. விண்ணப்பக் கட்டணத்தை "டிடி' ஆக செலுத்த வேண்டும். இப்புதிய முறை எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
