UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM
ADDED : ஜூலை 07, 2011 04:50 PM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நடத்துகிறது.
அதன்படி
, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 8ம் தேதி துவங்கி சுமார் ஒரு மாதங்களுக்கும் மேல் நடைபெறுகிறது.ஜுலை
8ம் தேதி காலை 9 மணிக்கு 199.75 கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும், 3 மணிக்கு 199.50 கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களும், 4.30 மணிக்கு 199.25 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும், 6 மணிக்கு 199.00 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டன
. கடிதங்கள் பெறாத மாணவர்களும், அவர்களது கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு ஏற்ற நாளில் கலந்தாய்வில் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.