UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM
ADDED : ஜூலை 08, 2011 06:32 PM
அ நிறம் | அளவு
சென்னை பல்கலையின் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் அல்லது http://kalvimalar.dinamalar.com/madrasurev_UG_apr2011.asp
-ல் தெரிந்து கொள்ளலாம்.2008-09
ம் கல்வியாண்டு முதல் இளநிலை படிப்பில் சேர்ந்த மாணவர்கள், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பாடம் ஒன்றுக்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும்.ஜுலை
21ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இறுதியாண்டுத் தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும தோல்வி அடைந்தவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
. இதற்கான கட்டணம் ரூ.250. இதற்கு விண்ணப்பிக்க ஜுலை 15ம் தேதி கடைசி நாளாகும்.உடனடித் தேர்வு சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஜுலை
23ம் தேதி நடைபெறும்.