தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இ.சி.இ. பிரிவை தேர்வு செய்த மாணவர்கள்

இ.சி.இ. பிரிவை தேர்வு செய்த மாணவர்கள்

இ.சி.இ. பிரிவை தேர்வு செய்த மாணவர்கள்


UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM

ADDED : ஜூலை 09, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM ADDED : ஜூலை 09, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல் முறையாக தர வரிசைப் பட்டியல் வெளியிட்டபோது, திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில், பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் அதிகமான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரித்ததையடுத்து, தர வரிசைப் பட்டியல் மாற்றம் செய்யப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டன.


முதல் பட்டியலில் 37வது இடத்தில் இருந்த திண்டுக்கல் மாணவர் அசோக்குமார், மறுமதிப்பீட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் இரண்டு மதிப்பெண்கள் (198+2) அதிகரித்ததை அடுத்து, முதல் இடத்திற்கு, வந்துள்ளார். ஏற்கனவே முதல் இடத்தைப் பிடித்திருந்த திவ்யா, இரண்டாவது இடத்திற்கு வந்தார்.


இரண்டாம் இடம் பிடித்த திவ்யா, கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., படிப்பை தேர்வு செய்தார். மூன்றாம் இடம் பிடித்த யோகபரசுகன், குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவையும், நான்காம் இடம் பிடித்த சென்னை மாணவி மகாலட்சுமி, கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவையும் தேர்வு செய்தனர். ஐந்தாம் இடம் பிடித்த கோவை கே.கே.புதூர் மாணவி அர்ச்சனாவும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. பிரிவை தேர்வு செய்தார். முதல் 20 மாணவர்களில், அதிகமான மாணவர்கள் இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us