UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 10:49 AM
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட, 682 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு வரும் 11ம் தேதி, காலை 11 மணி நடக்கிறது.
ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பில் சேர தகுதி வாய்ந்த, மேல்நிலைக் கல்வி முடித்த மாணவர்களிடமிருந்து, 12 ஆயிரத்து 366 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், கல்வி தகுதியின்மை மற்றும் அதிக வயது போன்ற காரணங்களால், 70 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, கலந்தாய்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு இடம், நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களை www.pallikalvi.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
