UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 03:03 PM
டான் பாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ் கல்வி நிறுவனத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் டிசைன் படிப்புகளில் புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் ஆகின்றன.
விஷுவல் கம்யூனிகேஷன் தொடர்பான 7 புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன. அதில் இளநிலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகளும் அடங்கும். ஆர்ட், டிசைன், மீடியா துறைகளில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இப்படிப்புகள் அமைந்துள்ளன.
ஆர்ட் அன்ட் டிசைன் (ஹானர்ஸ்), டிப்ளமோ இன் வீடியோகிராபி அன்ட் டெலிவிஷன் புரொடக்ஷன், டிப்ளமோ இன் கம்யூனிகேஷன் டிசைன், டிப்ளமோ இன் அனிமேஷன் அன்ட் விஷுவல் எபெக்ட்ஸ், டிப்ளமோ இன் அட்வெர்டைசிங், டிப்ளமோ இன் போட்டோகிராபி, டிப்ளமோ இன் நியூ மீடியா டெக்னாலஜிஸ் ஆகிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மீடியா துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இப்படிப்புகள் அமையும்.
