UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 03:18 PM
அ நிறம் | அளவு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 500 இளநிலை விரிவுரையாளர்களை மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 500 இளநிலை விரிவுரையாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில், 5 ஆண்டுகளுக்கு அவர்கள் பணிபுரிய வேண்டும்.
யு.ஜி.சி., விதிமுறைப்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவர். வாரம் 12 மணி நேரம் இவர்கள் பணிபுரிய வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும், ஒதுக்கீட்டு முறை இதற்கும் பொருந்தும்.
ஐந்து ஆண்டுகள் பணி புரிந்ததும், கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுரைப்படி, காலமுறை ஊதியப்படி பணியமர்த்தப்படுவர்.
