தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்:20ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்படும்

2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்:20ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்படும்

2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்:20ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்படும்


UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM

ADDED : ஜூலை 09, 2011 03:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM ADDED : ஜூலை 09, 2011 03:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் தாய் - சேய் நல மருத்துவமனையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான, செயல்முறை விளக்க கருத்தரங்கை, நேற்று அவர் துவக்கிவைத்தார்.


பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

: முதல் கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில், 71 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.


எஞ்சியுள்ள இடங்களுக்கான

, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை எந்த தேதியில் துவங்குவது என்பது குறித்து, வரும் 20ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்படும்.


திருச்சியில் தனியார் நடத்தும்

, சென்னை மருத்துவக் கல்லூரியை, இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இக்கல்லூரிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. அனுமதி கிடைத்தால், அந்த கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us