UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 03:21 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் 30ம் தேதி முதல் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை
8ம் தேதி துவங்கியது. 8ம் தேதியன்று மொத்தம் 1025 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 306 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. வந்திருந்த 719 பேரில் ஒருவர் பாடப்பிரிவினை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டார். மீதமுள்ள 718 பேரும் அவரவர் விரும்பிய பாடப்பிரிவினை தேர்வு செய்து அதற்கான ஆணைகளையும் பெற்றுக் கொண்டனர்.718
பேரில் 284 மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர். 153 மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், 140 பேர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர்.பொதுப்பிரிவின் கீழ் மொத்தமுள்ள
1,38,306 இடங்களில் ஜுன 8ம் தேதி 718 இடங்கள் நிரம்பியுள்ளன.