UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 05:56 PM
தமிழகத்தில் இருந்து எப்போதுமே நல்ல திறமையான ஆட்களை தேவையான அளவிற்கு தேர்வு செய்ய முடியும். இங்கு நடத்தப்படும் ராணுவ முகாமிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று தேர்வுக் குழுவின் பொது மேலாளர் (சென்னை) பிரிகேடியர் பங்கஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக கல்விச் சூழலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில் இங்குள்ள இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று திறமையாக செயல்படுகின்றனர். பொதுவாக இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்களில் தமிழ்நாட்டில் நடத்தப்படும் முகாம்கள் மூலமாகத்தான் தேவையான வீரர்களை தேர்வு செய்ய முடிகிறது. அதிலும், தமிழகத்தில் இருந்து வரும் இளைஞர்கள் நல்ல துடிப்புடன் செயல்படுவதால், தமிழகத்திற்கு நன்மதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக இருக்கும் கல்விக் சூழலுக்கு நிச்சயம் நன்றி தெரிவித்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
