மாணவர்களை குழப்பும் மருத்துவ கவுன்சிலிங் குளறுபடிகள்
மாணவர்களை குழப்பும் மருத்துவ கவுன்சிலிங் குளறுபடிகள்
UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM
ADDED : ஜூலை 10, 2011 11:51 AM
நடப்பு கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், கடந்த 21ம்தேதி வெளியிடப்பட்டது. முதல்கட்ட கவுன்சிலிங் 30ம்தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய நிலவரப்படி, திருவாரூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகள், தாகூர் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி, சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு, இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., ஒப்புதல் பெறப்படவில்லை. கவுன்சிலிங் 30ம்தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 26ம்தேதி வரை இக்கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ., அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனால், எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்கில் இக்கல்லூரிகள் இடம்பெறுமா என்ற அச்சம், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது. ஒருவழியாக கடந்த 27ம்தேதி,தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தாகூர் மருத்துவக் கல்லூரிக்கும், 29ம்தேதி ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கும் எம்.சி.ஐ., ஒப்புதல் பெறப்பட்டது. ஜூலை 1ம்தேதி நிலவரப்படி, &'தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 650 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன&' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
ஆனால்
, 2ம்தேதி கவுன்சிலிங்கிற்கு பின், மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் விவரங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 733 இடங்கள் உள்ளதாகவும், இவற்றில், சென்னை ஸ்ரீமுத்துகுமரன், சேலம் அன்னபூர்ணா மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி மருத்துவக் கல்லூரிகளில், தலா 97 இடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அன்று இரவோடு இரவாக, இக்கல்லூரிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதில், பல ரகசியங்கள் அடங்கியுள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தலா 22 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைக்கப்பட்டன.மேலும்
, இந்த ஆண்டு புதிதாக துவக்கப்பட்டுள்ள, மாதா மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடான 75 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட கவுன்சிலிங்கிற்கு சேர்க்கப்படவில்லை. சுகாதாரத் துறை அமைச்சரும், மருத்துவக் கல்வி இயக்ககமும் இப்படி முன்னுக்குபின் முரணான தகவல்களை தருவது, தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக மாணவர் மற்றும் பெற்றோர் கருதுகின்றனர். மேலும், கவுன்சிலிங் துவங்க சில நாட்களுக்கு முன்புவரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்காதது, தனியார் கல்லூரிகளின் அந்தஸ்தை இரவோடு இரவாக மாற்றுவது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது போன்ற செயல்கள், சுகாதாரத்துறை, மருத்துவக் கல்வி இயக்ககம், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், எம்.சி.ஐ., ஆகியவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாக, அவர்கள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.இதுகுறித்து
, பெயர் வெளியிட விரும்பாத எம்.பி.பி.எஸ்., விண்ணப்பதாரரின் தந்தை ஒருவர் கூறும்போது, &'இனி முதலில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ., ஒப்புதல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் ஆகியவற்றை இறுதி செய்து, மருத்துவக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதன் பின்தான், எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் துவங்கப்பட வேண்டும்&' என்றார்.பெயர்
வெளியிட விரும்பாத மருத்துவக் கல்வி இயக்ககத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, &'அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அனுமதி குறித்த எம்.சி.ஐ -ன் நிலையை வேண்டுமானால், கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் அறிய நாங்கள் முயற்சிகள் எடுக்கலாம். தனியார் மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரை, அந்தந்த கல்லூரிகள்தான் மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதலை எம்.சி.ஐ -யிடம் பெற வேண்டும்&' என்றார்.