கல்விக் கடனில் கறார் கூடாது - வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
கல்விக் கடனில் கறார் கூடாது - வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM
ADDED : ஜூலை 10, 2011 11:51 AM
அ நிறம் | அளவு
மருத்துவம், பொறியியல், பிற உயர் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ள நிலையில், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பங்கள் வங்கிகளில் குவிந்து வருகின்றன. வங்கிகள் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் இ- மெயிலில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில்
, கல்விக்கடன் கேட்கும் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். மாணவர்களை உடனடியாக வட்டி கட்டச்சொல்லி நிர்பந்திக்க கூடாது. 2009 ஏப்., 1க்கு பிறகு வங்கிக் கடன் பெற்ற தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி மாணவர்களுக்கு அரசிடம் இருந்து வட்டி பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களை அலைக்கழிக்காமல் வங்கி நிர்வாகங்கள் கல்விக்கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில் கலெக்டர்களின் தலைமையில் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.