தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.இ. நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கலந்தாய்வு

பி.இ. நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கலந்தாய்வு

பி.இ. நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கலந்தாய்வு


UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM

ADDED : ஜூலை 12, 2011 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM ADDED : ஜூலை 12, 2011 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் கூறுகையில், "பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ல் துவங்கி, ஆக.,6 வரை நடக்கிறது. மாநில அளவில் உள்ள 6 அரசு கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட 239 கல்லூரிகளில் காலியாக உள்ள 24,000 இடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.


நேரடி 2 ம் ஆண்டு சேர்க்கைக்கு 26,000 பேர் விண்ணப்பித்தனர். ஜூலை 14 ல் காலை 9 மணிக்கு பி.எஸ்சி., மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.


ஜூலை 15ம் தேதி காலை 8 மணிக்கு கெமிக்கல் பிரிவு
காலை 10 மணிக்கு டெக்ஸ்டைல் லெதர் பிரிண்ட்டிங் பிரிவு
பகல் 12 மணி முதல் ஜூலை 17 வரை சிவில் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.


ஜூலை 17 ம் தேதி பிற்பகல் 4 மணி முதல் ஜூலை 22 வரை மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 22 முதல் ஆக., 6 வரை எலக்ட்ரிக் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.


மாணவர்கள் தங்களது தரவரிசை (கட்-ஆப் மார்க்) பட்டியலை www.accet.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கென, புது, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லூரி வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்" என்றார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us