UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM
ADDED : ஜூலை 12, 2011 12:52 PM
சமச்சீர் கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு அளித்த அறிக்கை மீதான விசாரணை சென்னை உயர் நீதின்றத்தில் 2வது நாளாக விசாரணைக்கு வந்தது.
நிபுணர் குழு அளித்த அறிக்கையை விசாரித்து ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்கும்படி உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கை மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமச்சீர் கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்தையும் இணைக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் முடிவில், வழக்கு விசாரணை புதன்கிழமை தொடர்ந்து நடைபெறும் என்றும், அப்போது சமச்சீர் கல்வி நிபுணர் குழு வரைவு அறிக்கையும், அதன் மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களையும், நிபுணர் குழுவின் 4 நாள் கூட்ட நிகாவு பற்றிய விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சமச்சீர் கல்வி வழக்கு இந்த வாரத்திலேயே முடிக்கப்படும் என்று தலைமை நீதிபதி உறுதிபடக் கூறியுள்ளார்.
