UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 11:13 AM
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலமாக நடத்துகிறது.
தற்போது பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் ஜுலை 14ம் தேதி வரை மொத்தமாக ஓசி பிரிவில் 7,678 இடங்களும், பிசிஎம் பிரிவில் 440 இடங்களும், பிசி பிரிவில் 4,989 இடங்களும், எம்பிசி பிரிவில் 2,677 இடங்களும், எஸ்சிஏ பிரிவில் 37 இடங்களும், எஸ்சி பிரிவில் 492 இடங்களும், எஸ்டி பிரிவில் 9 இடங்களும், எப்ஓசி பிரிவில் 33 இடங்களும் நிரம்பிவிட்டன.
ஜுலை 14ம் தேதி வரை அதாவது கடந்த 7 நாட்களாக நடந்து வந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வில் 16,355 இடங்கள் நிரம்பியுள்ளன.
தற்போது, மொத்தமாக ஓசி பிரிவில் 36,105 இடங்களும், பிசிஎம் பிரிவில் 4515 இடங்களும், பிசி பிரிவில் 32,437 இடங்களும், எம்பிசி பிரிவில் 24,510 இடங்களும், எஸ்சிஏ பிரிவில் 4,227 இடங்களும், எஸ்சி பிரிவில் 19,332 இடங்களும், எஸ்டி பிரிவில் 1,274 இடங்களும் காலியாக உள்ளன.
ஜுலை 15ம் தேதி காலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 4811 இடங்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 771 இடங்களுக்கும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,19,419 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
7வது நாள் இறுதியில் மொத்தமாக 1,25,001பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாக உள்ளன.
