எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூ.-ஐ தேர்வு செய்யும் பெண்கள்
எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூ.-ஐ தேர்வு செய்யும் பெண்கள்
UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 11:58 AM
இப்படிப்பை தேர்வு செய்துள்ள 3972 மாணவர்களில், 2603 பேர் பெண்கள். 1369 பேர் ஆண்கள்.
பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளை ஆண்களைவிட பெண்களே அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் ஏரோநாடிக்கல் படிப்புகளை பெண்கள் குறைந்தளவிலேயே தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல் படிப்பு, அதிகளவில், மாணவர்களால் தேர்வுசெய்யப்பட்ட படிப்பாக உள்ளது.
பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கிய கடந்த 7 நாட்களில் 16,355 மாணவர்கள் பொறியியல் சேர்க்கைப் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக 19,803 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், 3385 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. வந்தவர்களில் 54 பேர் எந்தப் படிப்பையும் தேர்வு செய்யவில்லை.
