தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்

குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்

குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்


UPDATED : ஜூலை 16, 2011 12:00 AM

ADDED : ஜூலை 16, 2011 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2011 12:00 AM ADDED : ஜூலை 16, 2011 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தைகள் பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும், என கலெக்டர் மதிவாணன் பேசினார்.


மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமலைசாமி பேசுகையில், "மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்; வீட்டுக்கு ஒரு குழந்தை அவசியம்; இரண்டாவது குழந்தை ஆடம்பரம்; மூன்றாவது குழந்தை ஆபத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், சிசு கொலையை தடுக்க வேண்டும்" என்றார்.


கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தை பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும், பெண்கள் இருப்பார்கள் என்பது மாறி, தமிழக முதல்வரில் துவங்கி, அனைத்து இடங்களிலும் பெண்களே முன்னணி யில் உள்ளனர்.


கோவிலில் உள்ள விளக்கை போன்றவர்கள் பெண்கள். அவ்விளக்கு ஜோதி தரும் அளவுக்கு, குடும்பம் பிரகாசிக்கும். குடும்பம் முன்னேறினால், கிராமம் முன்னேறும்; கிராமம் முன்னேறி னால் நாடு முன்னேறும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us