sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கல்வித் துறையில் 113 பேருக்கு கருணை பணி நியமனம்

/

பள்ளிக்கல்வித் துறையில் 113 பேருக்கு கருணை பணி நியமனம்

பள்ளிக்கல்வித் துறையில் 113 பேருக்கு கருணை பணி நியமனம்

பள்ளிக்கல்வித் துறையில் 113 பேருக்கு கருணை பணி நியமனம்


UPDATED : ஆக 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


சென்னை:
பள்ளிக் கல்வித் துறையில், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 113 பேருக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அலுவலக உதவியாளர் பணிக்கு 70 பேர், இரவுக் காவலர் பணிக்கு 18 பேர், துப்புரவாளர் பணிக்கு 25 பேர் என 113 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் தங்கம் தென்னரசு பேசுகையில், “பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் மட்டும் 60 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே துறையில் கருணை அடிப்படையில் ஏற்கெனவே 270 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 113 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் மேலும் 320 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மாநிலம் முழுவதிலும் இருந்து கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆயிரத்து 275 பேர் மனு செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி வரவேற்றார். துறைச் செயலர் குற்றாலிங்கம் உட்பட துறையின் உயர் அதிகாரிகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
அரை குறை ஏற்பாடு: டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள ஸ்டூடியோவில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகச் சிறிய அறையில் 113 பேரையும் உட்கார வைக்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடினர்.
முதலில் சேரைப் போட்டனர். அப்படி போட்டால் 50 பேர் கூட உட்கார முடியாது என்பது தெரிந்ததும், சேரை எடுத்துவிட்டு சிறுவர்கள் அமரக்கூடிய பெஞ்ச்சை போட்டனர். அதில் பலரையும் நெருக்கமாக உட்கார வைத்தனர்.
அப்படியிருந்தும் 30க்கும் மேற்பட்டோரை அரங்கிற்குள் உள்ள தடுப்புப் பலகையின் பின்னால் உட்கார வைத்தனர். வளாகத்தில் திறந்தவெளி இடத்திலேயே விழாவை ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில அதிகாரிகள் முணுமுணுத்தனர்.






      Dinamalar
      Follow us