UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM
ADDED : ஜூலை 21, 2011 11:26 AM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலையில் நடந்து வரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் தமிழ் மீடியப் படிப்புகளுக்கும் சேர்த்தே கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதுவரை சிவில் இன்ஜினியரிங் தமிழ் மீடியத்தில் மொத்தம் 38 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இதில் 10 பேர் மாணவர்கள், 28 பேர் மாணவிகளாவர்.
அதேப்போல, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தமிழ் மீடியப் படிப்பில் இதுவரை 41 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 36 மாணவர்கள், 5 பேர் மாணவிகளாவர்.
பொறியியல் படிப்புகள் தமிழ் மீடியத்தில் வந்ததால், தமிழ் மீடியத்திலேயே பிளஸ்2 முடித்த மாணவ, மாணவியருக்கு எளிதாக உள்ளது.
தமிழ் மீடியம் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 657 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 717 இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது.
