தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு பணிவாய்ப்பு

மத்திய அரசு பணிவாய்ப்பு

மத்திய அரசு பணிவாய்ப்பு


UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM

ADDED : ஜூலை 21, 2011 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM ADDED : ஜூலை 21, 2011 04:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் பற்றி நாம் நன்கு அறிவோம். எஸ்.எஸ்.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பின் சார்பில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் போதைப் பொருள் தடுப்பு அமைப்பில் சர்வைலன்ஸ் அஸிஸ்டென்ட்டுகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தேவைகள்:
சர்வைலன்ஸ் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.


பிற தகவல்கள்:
எஸ்.எஸ்.சி.,யின் சர்வைலன்ஸ் அசிஸ்டன்ட் காலியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாகவே நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் தமிழ் நாட்டின் சென்னை, மதுரை மற்றும் நமக்கு அண்டை மாநில ஊர்களான திருவனந்தபுரம், ஐதராபாத், பெங்களூரு ஆகிய மையங்களில் உள்ள 13 இன்டலிஜென்ஸ் மையங்கள் ஏதாவது ஒன்றில் பணி புரிய வேண்டியிருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை:
ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ள இந்த பதவிக்கு ரூ.50/ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,
மகளிர், உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. கட்டணத்தை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் மூலமாக செலுத்த வேண்டும்.


இதனை பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தகுந்த இடத்தில் மறக்காமல் ஒட்ட வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த பின் தகுந்த இணைப்புகளைச் சேர்த்துப் பின்வரும் முகவரிக்கு 29.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி:
The Regional Director (KKR),
Staff Selection Commission,
Ist Floor, E Wing,
Kendriya Sa-dan,
Koramangala,
Bangalore - 560 034


விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 29.07.2011
இணையதள முகவரி:
www.ssckkr.kar.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us