UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM
ADDED : ஜூலை 23, 2011 04:49 PM
சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. இவ்வழக்கை அவசரகால மனுவாக ஏற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வியை தொடர இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும், விசாரணையை ஜுலை 26ம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டனர்.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் மாணவர்களிடம் கிடைத்துவிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், இதுவரை பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு அளிப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபடவில்லை. ஜுலை 26ம் தேதியன்று விசாரணை முடிவிற்காக தமிழக அரசு காத்திருக்கிறது.
இந்த நிலையில், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த சமச்சீர் கல்வி பாடங்கள் அனைத்தும் நீக்கப்பட்டது.
