தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு


UPDATED : ஜூலை 28, 2011 12:00 AM

ADDED : ஜூலை 28, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2011 12:00 AM ADDED : ஜூலை 28, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு நடக்கிறது. ரயில்வேயில் கலாசியாக சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் துப்புரவு பணியாளர்கள், பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறவும், டிரைவிங் லைசென்ஸ் பெறவும் இத்தேர்ச்சி அவசியம். இதற்காக ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு கட்டாய கல்வி சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் தோல்வி அடைய செய்யக்கூடாது.

தனித்தேர்வு மூலம் இந்த வகுப்பிற்கான தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி வெளியிட வேண்டி வரும். எனவே, நடப்பு கல்வி ஆண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இச்சட்டத்தால் 8ம் வகுப்பு நேரடியாக படித்தால் மட்டுமே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வையும் எழுத முடியும். இதனால், மத்திய, மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க, 8ம் வகுப்பு தகுதியாக உள்ளதால், இத்தேர்வு எழுத வழியின்றி தவிக்க நேரிடும். இனிவரும் காலங்களில் மாணவர்கள் 8ம் வகுப்புடன் கல்வியை முடித்து விடாமல், பிளஸ் 2 வரையாவது கல்வியை தொடர வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us