UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM
ADDED : ஜூலை 29, 2011 05:24 PM
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சியின் துவக்க விழாவில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆர். பிரபாகரன் பேசுகையில், வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள், கால்நடை மருத்துவத்தில், கொடிய வியாதிகளுக்கான தீர்வு காணும் படிப்பை படிக்க ஆர்வத்தை தூண்டுகின்றன என்று கூறினார்.
உலகிலேயே இந்தியாவில் தான் சிறிய விலங்குகளுக்கும் ஆர்த்தோபெடிக்ஸ் மற்றும் ஆப்தமாலஜி துறைகளைத் தனித்தனியாக வைத்துள்ளோம். மிகக் கடினமான நோய்களுக்கும் விரைவில் தீர்வு கண்டு, விலங்குகளை குணமாக்குவதால், பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நம்முடன் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு கோரிக்கை வைக்கின்றன.
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ். ஐயப்பன் கூறுகையில், இங்கு கால்நடைகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, அவற்றுக்கு நிரந்தரமான தீர்வும் காணப்பட்டுள்ளது. மிகவும் கடினமான நோய்க்கு கடினமான தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன. இதனாலேயே வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அவர்களது மாணவர்களை இங்கு படிக்க அனுப்புகின்றனர் என்றார்.
உதாரணமாக, விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம், யூனிவர்சிட்டி ஆப் மெக்சிகன், அமெரிக்க பல்கலைக்கழகம், மலேசியப் பல்கலைக்கழக ஆகியவற்றில் இருந்து மாணவர்கள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்துள்ளனர்.
மேலும் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் இருந்து 55 மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியா பல்கலையில் இருந்தும் மாணவர்கள் வரவிருக்கின்றனர்.
விலங்குகளுக்கும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் முறை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், சி-ஆர்க் ப்ளுரோஸ்கோப்பி மற்றும் காற்று மூலமாக அனஸ்தீசியா கொடுக்கும் கருவிகள் மருத்துவத் துறையில் அதிக வரவேற்பைப் பெறுகிறது.
