UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM
ADDED : ஜூலை 29, 2011 05:55 PM
சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் (சிடாக்) , நிறுவனம் மத்திய அரசின் தகவல் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் கேந்திரமான நிறுவனமாகும். எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஐ.டி., துறையில் வடிவமைத்தல் மற்றும் மேம்பாடு, அப்ளிகேஷன் ஓரியன்டட் ரிசர்ச் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரம் கிளையில் புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் 80 காலி இடங்களும், புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் 17 காலிஇடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: சிடாக் நிறுவனத்தின் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 03.08.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். புராஜக்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய ஏதாவது பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
புராஜக்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க எம்.இ., எம்.டெக்., படிப்பைக் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், வி.எல்.எஸ்.ஐ., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் (பவர் சிஸ்டம்ஸ்), பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: சிடாக் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/ஐ டி.டி., யாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ செலுத்த வேண்டும். டி.டி.,யை CDAC Thiruvanantha puram என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் டி.டி.,யை மட்டும் பின்வரும் முகவரிக்கு 05.08.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்கள் அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
Administrative Officer (Recruitment ), C&DAC,
PB NO : 6520, Vellayambalam,
Thiruvananthapuram - 695033, Kerala.
இணையதள முகவரி: http://www.cdac.in/html/jobs/current.aspx
