UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM
ADDED : ஜூலை 30, 2011 12:13 PM
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் இருந்து நன்கொடை, கல்விக் கட்டணங்களை அதிகமாக வசூலிப்பது தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்தக் குழுவில், அண்ணா பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை பேராசிரியர் வி. ஜெயபாலன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பி.கே. பழனிச்சாமி உட்பட 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் நன்கொடை, கல்விக் கட்டணம் பற்றி வரும் புகார்களை ஆராய்ந்து அரசு அறிக்கை அனுப்புவர். மேலும், அவ்வப்போது சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் செய்வர்.
இதுவரை தமிழ்நாடு தொழில்நட்பக் கல்விக் கவுன்சில் துணைத் தலைவர் எம்.எஸ். பழனிச்சாமி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, புகார்களை கவனிக்கவும், ஆய்வு நடத்தவும் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த குழு கலைக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
