ஏ.சி.ஏ., தகுதிக்கு சவுத் இந்தியன் பாங்க் பணி வாய்ப்பு
ஏ.சி.ஏ., தகுதிக்கு சவுத் இந்தியன் பாங்க் பணி வாய்ப்பு
UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM
ADDED : ஜூலை 30, 2011 12:41 PM
இந்தியாவில் சுதேசி இயக்கத்தின் போதே துவக்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி கேரளாவின் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாடு தழுவிய கிளைகள், நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல்வேறு விதங்களில் இயங்கும் இந்த வங்கியில் 25 சார்டர்டு அக்கவுன்டன்ட் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதிகள்:
சவுத் இந்தியன் வங்கியின் சார்டர்டு அக்கவுன்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.06.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலாளர் ஸ்கேல் 2 அளவிலான இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஏ.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
இதர விபரங்கள்:
ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பத்தை டைப் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இத்துடன் சுயமாக சான்றளிக்கப்பட்ட கல்வித் தகுதி சான்றிதழ் நகல்கள், வயதுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைப் பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் அதற்கான அத்தாட்சியை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் பாஸ்போர்ட் புகைப்படத்தையே நேர்காணலின் போது எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை நினைவில் வைக்கவும். விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் கவரின் மீது Application for the Post of Charted Accountants & Scale II என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள் 06.08.2011க்குள் முகவரியைச் சென்றடைவதை உறுதிப்படுத்தவும். முழுமையான தகவல்களைப் பெற பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று பார்க்கவும்.
முகவரி:
Asst. General Manager (Personnel),
The South Indian Bank Ltd.,
BIB House, Mission Quarters,
Thrissur - 680 001.
KERALA.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 06.08.2011
இணையதள முகவரி: www.southindianbank.com/
