UPDATED : ஆக 03, 2011 12:00 AM
ADDED : ஆக 03, 2011 01:59 PM
அ நிறம் | அளவு
ஆகஸ்ட் 2ம் தேதியன்று 5331 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 1516 பேர் வரவில்லை. வந்தவர்களிலும் 8 மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.
மீதமுள்ள 3807 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில், பொறியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து சேர்க்கை ஆணையையும் பெற்றுக் கொண்டனர்.
இதுவரை கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு வராதோர் விழுக்காடு 21 ஆக உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யாமல் இதுவரை மொத்தமாக 216 மாணவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இன்னும் 9 நாட்கள் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
