தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனதில் கேள்விகள் எழுந்தால் வெற்றி கிடைக்கும்

மனதில் கேள்விகள் எழுந்தால் வெற்றி கிடைக்கும்

மனதில் கேள்விகள் எழுந்தால் வெற்றி கிடைக்கும்


UPDATED : ஆக 08, 2011 12:00 AM

ADDED : ஆக 08, 2011 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2011 12:00 AM ADDED : ஆக 08, 2011 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனதில் கேள்விகள் எழும்போது தான், வாழ்வில் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என, மதுரை - அருப்புக்கோட்டை ரோடு ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிசில் நடந்த எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில், சென்னை நிதி மேலாண் மற்றும் ஆய்வு மைய தலைவர் பாபி எஸ்.சீனிவாசன் பேசினார்.

விழாவில், பாபி எஸ்.சீனிவாசன் பேசியதாவது: எதை, எப்படி அணுக வேண்டும் என்பது தான், எம்.பி.ஏ., மாணவர்களுக்கு முதல் பாடம். எந்த அளவு கேள்விகள் எழுகிறதோ, அந்தளவு படித்தால் மனதில் பதியும்; வெற்றியும் கிடைக்கும். அறிவுக்கும், மொழிக்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஆராய்ந்து அறிவை பெற வேண்டும்.

முன்னேற பொறுமை அவசியம். பல கேள்விகள் வரும் போது, ஒரு பொருளை முழுமையாக அறியலாம்.நாம் வாழும் நாட்டின் நிலைமை பலருக்கு தெரிவதில்லை; அறிய விரும்புவதும் இல்லை. இந்நிலை தான் படிப்பிலும் தொடர்கிறது. கல்வியில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், 50 ஆண்டுக்கு முன் இருந்த அறிவாற்றல் இன்று இல்லை. புரிந்து படித்தால் மட்டுமே கிடைத்த வேலையை தக்க வைக்க முடியும். டிவியை தவிர்த்து, ஒவ்வொரு நாளையும், அறிவை வளர்க்க பயன்படுத்த வேண்டும், என்றார்.

கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: வாழ்க்கைத் தரம் உயர கல்வி அவசியம். பணம் மட்டும் வாழ்க்கையில்லை. பணம் இருக்கும் இடத்தில் தான் மதிப்பு கிடைக்கிறது. மாணவர்கள் அதை உணர வேண்டும். திறமை இல்லாமல் படித்த நிறைய பேரின் வாழ்க்கை தடம் மாறுகிறது. ஆண்டுதோறும் படித்து வெளியேறுபவர்களில், 10 சதவீதம் பேர் மட்டும் பயனடைகின்றனர். இந்நிலையை தவிர்க்க முதலாம் ஆண்டிலேயே, இங்கு மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்து வெளியேறும் போது, வாய்ப்புகள் தேடி வரும், என்றார்.

இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜன், கல்லூரி ஆலோசகர் பாலகிருஷ்ணன், முதல்வர் சீனிவாசன், இயக்குனர் மனோகரன், மண்டல இயக்குனர் ஜெயராமன் பேசினர். தினமலர் மேலாளர் ஆர்.லட்சுமிபதி உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us