தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வு


UPDATED : ஆக 08, 2011 12:00 AM

ADDED : ஆக 08, 2011 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2011 12:00 AM ADDED : ஆக 08, 2011 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு ஞாயிற்றுக் கிழமை நடந்தது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில், 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்த தேர்வில், 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

பொது அறிவு, பொதுத் தமிழ் பிரிவுகளில் தலா 100 கேள்விகள் கேட்கப்பட்டன. காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. கண் பார்வையற்றோருக்கு கூடுதலாக அரை மணி நேரம் அளிக்கப்பட்டது.

அமைச்சுப் பணிகள் மற்றும் நீதித் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 145 இளநிலை உதவியாளர், 17 சுருக்கெழுத்தர் மற்றும் 106 தட்டச்சர் பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

"கண் பார்வையற்றோருக்கு தனியாகவும், கை, கால் ஊனமுற்றோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கு தனியாகவும் தேர்வெழுத வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கண் பார்வையற்றோர் அவர்களுக்கான தேர்வுக் கூடத்தை அடையவும், ஊனமுற்றோரை தேர்வுக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டிருந்தது" என, தமிழ்நாடு மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர் கோபிநாத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us