தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேர்க்கை மதிப்பெண் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சேர்க்கை மதிப்பெண் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சேர்க்கை மதிப்பெண் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


UPDATED : ஆக 18, 2011 12:00 AM

ADDED : ஆக 18, 2011 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2011 12:00 AM ADDED : ஆக 18, 2011 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓபிசி மாணவர்களுக்கான சேர்க்கை விதிமுறைகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு முறையில் கடைபிடிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி ஐஐடி சென்னையின் முன்னாள் பேராசிரியர் பி.வி. இந்தெர்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண்ணை விட ஓபிசி பிரிவினரின் கட்-ஆப் மதிப்பெண் 10 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தெர்சன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் அளித்த தீர்ப்பில், கடைசியாக சேர்க்கைப்பெற்ற பொதுப் பிரிவு மாணவரின் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து அடுத்து வரும் ஓபிசி மாணவரது சேர்க்கை அமையக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதுவரை நடந்து முடிந்த பல்கலைக்கழக சேர்க்கைகளை எந்த விதத்திலும் இந்த தீர்ப்பு பாதிக்காது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us