UPDATED : செப் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ‘கரிஷ்மா’ கலை விழா, செப்.,5ல் நடக்கிறது.
கல்லூரி முதல்வர் யசோதா தேவி கூறியதாவது:
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் செப்.,5ல் காலை 9.30 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையேயான ‘கரிஷ்மா-2008’ கலைவிழா, நடக்கிறது. இதில் சினிமா பின்னணி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த விழாவில் காலை 10.00 மணிக்கு முகத்தில் வர்ணம் தீட்டுதல், அடுப்பில்லா சமையல், ‘கரிஷ்மா’ வாக தேர்வு செய்யப்படும் மாணவியருக்கான முதல்சுற்று, காலை 11.30க்கு டிசைனர் ஷோ, மதியம் 1.00 மணிக்கு பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் வெற்றி பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாலை 6.00 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் நடிகர் விஜய் ஆதிராஜ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
இந்தப் போட்டியில் கோவை பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள 60 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவ்வாறு யசோதா தேவி கூறினார்.

